Home
Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

About the Library

வரலாறு
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் 1948 பொது நூலக சட்டத்தின்படி 02.10.1952ல் துவங்கப்பட்டது. இந்நூலகம் ஆரம்ப காலத்தில் தெற்குவீதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்தது. பின்னாளில் இந்நூலகம் 22.09.1965ல் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நூலகம் உலகப் புகழ்பெற்ற மாமன்னர் இராஜராஜ சோழனால் நிறுவப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் (தஞ்சை பெரியகோவில்) அருகில் அமைந்துள்ளது.


கட்டிட அமைப்பு
இக் கட்டிடம் 22.09.1965ல் மாண்புமிகு முன்னாள் முதலைமச்சர் திரு.எம்.பக்தவச்சலம் அவர்களால் துவங்கப்பட்டது. இக்கட்டிடம் 9790 சதுரஅடி பரப்பளவை கொண்டது. இக்கட்டிடம் 1 ஏக்கர் 10192 சதுரஅடி பரப்பளவை கொண்டது.

வரவு
நூலக பராமரிப்பு மற்றும் நூலகர்களின் ஊதியம் வழங்க உள்ளாட்சி நிறுவனத்தில் இருந்து வசூல் செய்யப்படும் வீட்டு வரியில் 10% நூலகவரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நநூலக வரி வசூலைக் கொண்டு அனைத்து செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை தவிர பொது மக்களிடமிருந்து உறுப்பினர் காப்புத்தொகை புரவலர் காப்புத்தொகை நன்கொடையாக பெறப்பட்டு வருகிறது.

சேவை பகுதிகள்
சிறுவர் மற்றும் மகளிர் பகுதி குறிப்புதவி பகுதி குடிமைப்பணி பகுதி நூல்கள் / நாளிதழ்கள் பருவ இதழ்கள் பகுதி கணிப்பொறி பகுதி (இணையதளம்) அட்டை கட்டும் பகுதி நகல் அச்சு பிரிவு

உறுப்பினர்கள்
இந்நூலகத்தில் உறுப்பினராவதற்கு காப்புத்தொகை ரூ.20/- மற்றும் சந்தா தொகை ரூ.10/- ஆகக் கூடுதல் ரூ.30/- ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை சந்தா தொகை ரூ.10/-செலுத்தி உறுப்பினர் எண்ணை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 30183 ஆகும்.

சேவை நேரம்
மாவட்ட மைய நூலகம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்பட்டு வருகிறது. வாரவிடுமுறை வெள்ளிக்கிழமையும் 2வது சனிக்கிழமையும் விடுமுறை நாட்களாகும். மற்றும் அரசுவிடுமுறை நாட்களும் விடுமுறை நாட்களாகும்.

கணினிப்பொறி பகுதி
மாவட்ட மைய நூலகத்தில் 1 சேவையகம் (Server) 10 கணினிப்பொறிகளும் உள்ளன. நூலகப்பயன்பாட்டிற்கு 3 கணினிப்பொறிகளும் இணையத்தளத்திற்கு (Internet) 7 கணினிப்பொறிகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது. கணினிப்பொறியில் 161766 நூல்களும் 30189 உறுப்பினர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புள்ளி விவரங்கள்
மொத்த நூல்கள் : 1,61,766
மொத்த உறுப்பினர்கள் : 30,189
வாசகர் வருகை : 900 to 1000
நூல்கள் வாசிப்பவர்கள் : 500 to 550
நூல் இரவல் : 200 to 250
பயன்படுத்தப்படும் மொத்த நூல்கள் : 750 to 850
மின்னஞ்சல் முகவரி : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

 
OPAC

CHAT